Wednesday, February 10, 2010
சின்னத்திரையில் ஐஸ்வர்யா ராய்
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனை படைத்த கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கேச் சென்ற அமிதாப் பச்சன் வரிசையில் அபிஷேக் பச்சனும் கலர்ஸ் தொலைக்காட்சிக்காக பிங்கோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் டாக் ஷோ ஒன்றை நடத்தவுள்ளார். இதுவரை எந்த நடிகைக்கும் கொடுக்காத சம்பளத்தை ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கப் போவதாக அந்த டிவி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.