
வாரணம் ஆயிரம், அசல் படத்தின் வசூல் சமீரா ரெட்டிக்கும் மிகப் பெரிய மரியாதையை சேர்த்துக் கொடுத்திருக்கிறது. அது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இயக்குனர்களையும் தன் பக்கம் இழுத்துவரச் செய்திருக்கிறது. மும்பை நடிகைகளைவிட கேரள நடிகைகள் மேல் பிரியம் வைத்திருக்கும் இயக்குனர்கள்கூட இவர் பக்கம் பார்வையை பதிக்கிற அளவுக்கு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
உதாரணமாக கௌதம் மேனன் வாரணம் ஆயிரம் படத்திற்குப் பிறகு தான் இயக்குப்போகும் படத்திற்கு சமீராவையே ஹீரோயின் ஆக்கியிருக்கிறாராம். அஜீத்தின் 50வது படத்தை இயக்கப்போகும் கௌதம் மேனம் அப்படத்திற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்கள். அப்படத்தை துவக்குவதற்கு முன்பு குறுகிய கால தயாரிப்பாக இந்தப்படம் வரக்கூடும் என்கிறார்கள். திகில், மர்மம் கலந்த கதை என்று சொல்கிறார்கள். ஹீரோவாக நடிகை மகேஸ்வரியின் சகோதரர் நடிக்கிறார்.
இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பொதுவாக நடிகைகள் ஏற்கத் தயங்கும் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கிறாராம். தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய கௌதம் மேனனுக்கு ஒத்துக் கொண்டிருப்பார்போல....