பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, சிந்தனை செய், ஈரம், முன்தினம் பார்த்தேனே ஆகிய படங்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக உருவாகியிருப்பவர் தமன்.
தற்போது உலக நாயகன் கமல் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் யாவரும் கேளிர் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறார்கள்.
நகைச்சுவைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து கதையை உருவாக்கியிருப்பதாக கூறுகிறார்கள். தெனாலிக்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் மற்றுமொரு முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக இது இருக்கும் என்பதனை உறுதியாக நம்பலாம்.
இப்படத்தை தயாரிக்கவிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினும் நடிக்கவிருப்பது கூடுதல் தகவல்.