Saturday, February 13, 2010
சித்தார்த்துடன் ஸ்ருதிஹாசன் காதல்
நடிகர் சித்தார்த்தும் கமல்ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்றும் பரபரப்பாக செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.
நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் லக் படம் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போது தெலுங்கிலும், தமிழிலும் நாயகியாக நடிக்கிறார்.
தெலுங்கில் அவர் நடிக்கும் படத்தில் 'பாய்ஸ்' சித்தார்த் தான் கதாநாயகன். அந்த படத்தில் ஸ்ருதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். நாயகியாக வெற்றிக் கொடி நாட்டியாக வேண்டிய கட்டாயமிருப்பதால் ஸ்ருதியின் பாத்திரம் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளதாம்.
இதற்கிடையில், படத்தின் நாயகன் சித்தார்த்தையே, தனது நிஜ நாயகனாகவும் ஆக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டாராம் ஸ்ருதி.
சித்தார்த்தும், ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு மீடியாவில் இந்த செய்தி இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நடிகர் சித்தார்த் ஏற்கெனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஸ்ருதியே விரைவில் பேசுவார் என்று கமல்ஹாசனின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.