Saturday, February 13, 2010
யாவரும் கேளிர் - கமலுக்கு ஜோடியாக திரிஷா
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் யாவரும் கேளிர்.
இப்படத்தின் நாயகி தேடும் வேட்டையில் தற்போது சிக்கியிருப்பது அட நம்ம திரிஷாங்க. இந்தப் படம் உறுதியானதும் இந்தி மற்றும் தெலுங்கு படத் தயாரிப்பாளர்களிடம் கொஞ்சம் காத்திருங்கள் எனக் கேட்டுக் கொண்டு சென்னையிலேயே முகாமிட்டுக் கொண்டார்.
ஏற்கனவே மர்மயோகி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அப்படம் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு, இப்போது மீண்டும் யாவரும் கேளிர் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
கமலும் நடிக்கவிருக்கிறார் என்றதும் ரொம்பவும் குஷியாகிவிட்டார் திரிஷா. கமலுடன் நடிப்பதுதான் என் லட்சியம், என் கால்ஷீட்டை மொத்தமாக கமலுக்கே கொடுத்து
விட்டேன் என்று பெருமை பொங்க கூறுகிறார். ஏன் இந்த தாரளம்?
இதையும் விட்டுவிட்டால் இனி கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ என்ற பயத்தினால்தான் இப்படி தாரளமாகியிருக்கிறார் போலும். இதற்கு ஒரு படி மேல் போயி மற்ற படங்களைவிட கமல் சார்தான் எனக்கு முக்கியம் என்று ஓவராக உணர்ச்சி வசப்படுகிறார் நம்ம 3ஷா.