Sunday, February 14, 2010

கார் ரேஸில் அஜீத்



விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் யாரென்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜீத்
தான் என்று எல்லோராலும் கூறமுடியும். சில ஆண்டுகளுக்கு முன் 6 மாதம் ரேஸ், 6 மாதம் நடிப்பு என்று முடிவு செய்யுமளவுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டிய அஜீத் தன்னுடைய படங்களில் அதிகம் செலுத்தவில்லை. ஆகவே அவருடைய படங்கள் அன்றிலிருந்து சரியத் தொடங்கியது. இதனால் தயாரிப்பாளர்கள், மனைவி ஷாலினி, ரஜினிகாந்த ஆகியோரின் ஆலோசனைப்படி கொஞ்ச காலத்துக்கு ரேஸுக்கு குட் பை சொல்லிருந்தார்.

அதற்குபின்பு ஓய்வு நேரங்களில் குட்டி விமானங்களை ரிமோட் மூலம் இயக்குவதை பொழுதுபோக்காக மாற்றிக் கொண்டார். தற்போது மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பியுள்ளார்.

சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் இன்று நடந்த எம்ஆர்எப் 1600 பார்முலா கார் பந்தயத்தில் அஜீத் கலந்து கொண்டு கார் ஓட்டினார். ஏற்கெனவே இதற்கான பயற்சிப் போட்டிகளிலும் இரு தினங்கள் தொடர்ந்து கலந்து கொண்டார் அஜீத். அவருக்கு நரேன் கார்த்திகேயன் உதவி செய்தார்.

இன்று காதலர் தினம் என்பதால் அஜீத் கார் ஓட்டுவதைக் காண எக்கச்சக்க இளைஞர்கள் ஜோடி ஜோடியாக் குவிந்து விட்டனர் இருங்காட்டுக் கோட்டையில்.

அஜீத்தின் அசல் இதுதான்.
 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com