Thursday, February 4, 2010
கலைஞர் பாராட்டு விழா முரண்டு பிடிக்கும் த்ரிஷா!
நாள் நெருங்க நெருங்க ரிகர்சலில் பிசியாக இருக்கிறது கோடம்பாக்கம். பிப்ரவரி 6 ந் தேதி நடைபெறவிருக்கும் முதல்வர் கலைஞர் பாராட்டு விழாவுக்காக எல்லா முன்னணி நடிகர் நடிகைகளும் மேடையேற சம்மதித்திருக்கிறார்கள் ஒரு சிலரை தவிர! அவர்கள் யார் என்பதை பின் வரும் பாராக்களில் படிப்போம். அதற்கு முன் சில துளிகள்...
சங்கே முழங்கு என்ற பாடலுக்கு ஆடப் போகிறார்கள் ஸ்ரேயாவும், சினேகாவும். இதற்கான நடன ஒத்திகை தற்போது ஏ.வி.எம் ஸ்டியோவில் நடந்து வருகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்னொரு பாடலுக்கு நயன்தாராவும், பிரபுதேவாவுமே ஒனறாக ஸ்டேஜில் தோன்றப் போகிறார்களாம். பார்வையாளர் வரிசையில் முதல்வருக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிற சூப்பர் ஸ்டார் ரஜினியே கூட மேடையில் தோன்றி ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்கிறார்கள். அது கமல் நடிக்கும் சாக்ரடீஸ் நாடகத்தில் ஒரு காட்சியாக கூட இருக்கலாமாம்.
சரி, மேடையே ஏற மாட்டோம் என்று அடம் பிடிக்கிற நட்சத்திரங்கள் யார் யாராம்? த்ரிஷாவும், சந்தியாவும்! "நாங்கள் விழாவுக்கு வருவோம். ஆனால், பர்பாமென்ஸ் இல்லை" என்கிறார்களாம் கோரஸாக.
ஏன் இந்த அலுப்பு பொண்ணுங்களா?