Thursday, February 4, 2010
எதிர்காலத்தில் டைரக்ஷன்... அஜீத் அதிரடி பதில்!
தனது படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்திப்பது அஜீத்தின் வழக்கம். அடையார் பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் அத்தனை பேரையும் சந்திக்க உள்ளே வந்த அஜீத்தை வாசலில் நின்ற செக்யூரிடிகள் ஒரு வினாடி நிறுத்தினார்கள். செக்கிங்! சட்டென்று "இது அஜீத்தாச்சே..." என்று அடையாளம் கண்டு கொண்ட அவர்கள் வழிவிட்டு ஒதுங்க, "உங்க கடமையை செய்யுங்க" என்பது போலவே கையிரண்டையும் மேலே தூக்கி ஒத்துழைப்பு நல்கினார் தல.
கேள்வி-பதில் செஷன் இருக்கும் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றம். "சும்மா பார்க்கணும்னு வரச்சொன்னேன். வேறொன்றும் பேசப் போவதில்லை" என்று கூறினாலும் பின்னாலேயே சென்று தனது கேள்விகளையும் சந்தேகங்களையும் வீச தொடங்கினார்கள் பத்திரிகையாளர்கள்.
"என் படங்களை அரசியல்வாதிகளும் பார்க்கணும். அதனால்தான் எனக்கு அரசியல் வேண்டாம்னு சொல்றேன். ஜெயிச்சவங்க சந்தோஷத்துக்காக பார்க்கணும். தோற்றவங்க ஆறுதலுக்காக பார்க்கணும். வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள் வரும். இன்றைக்கு இருக்கிற சினிமா ரசிகர்கள் ரொம்ப மாறியிருக்காங்க. அதனால் இனிமேலும் அல்டிமேட் ஸ்டார்னு பட்டம் போட்டுக்கணுமா? வேண்டாம்" என்றார் அவர்களிடம்.
அசல் படத்தில் இணை இயக்கம் வரைக்கும் வளர்ந்திருக்கும் அஜீத், "எதிர்காலத்தில் படம் இயக்குகிற ஆசை இருக்கு. ஆனால் அதை நிதானமாக இன்னும் அனுபவங்களை சேர்த்துக் கொண்டு செய்வேன்" என்று கூறியதுதான் ஹைலைட்!