Thursday, February 4, 2010
கோ படத்திலிருந்து சிம்பு விலகல் -பின்னணியில் தமன்னாவா?
ஆஹா, மாறிட்டாருன்னு சந்தோஷப்பட்டா முனி நம்ம மேலேயே பாஞ்சிருச்சு. கோ படத்தில் சிம்புவின் தொழில் பக்தின்னு நாம சந்தோஷப்பட்டு முழுசா 24 மணி நேரம் ஆகலே. அதற்குள் அந்த படத்திலிருந்தே விலகி விட்டார் சிம்பு. பின்னணியில் என்ன நடந்தது?
எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்திச்சு. தமன்னாவை மாற்றியதில் இருந்துதான் பிரச்சனையே என்கிறார்கள் கோ யூனிட்டில். கார்த்திகாவை என்ன காரணத்தினாலோ ஒப்புக் கொள்ளவே இல்லையாம் சிம்பு. இதற்கிடையில் வாலிபன் படத்தை உடனே தொடங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறாராம் அப்படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. இந்த காரணத்தினாலும் கோ படத்திலிருந்து அவர் விலகியிருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
குழப்பமே இல்லாமல் படம் இயக்குவதுதான் என் பாணி. சிம்பு வாலிபன் படத்திலேயும் கவனம் செலுத்திக் கொண்டு என் படத்திலும் நடிப்பதென்பது நமக்கு சரிப்படாது என்கிறாராம் ஆனந்த். எலாஸ்ட்டிக்கை இரண்டு பக்கமும் இழுத்ததில்...
பிஞ்சுபோச்!