சென்ற ஆண்டு ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, கிராமி விருது போன்ற உயரிய விருதுகளை தட்டிச் சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது கைநழுவிப் போனது. கப்பிள் ரிட்ரீட் என்ற படத்திற்காக தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி, அவருடைய மகன் அமீன் பாடியிருந்த நா.. நா... என்ற பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் பாட்டும் ஆஸ்கார் விருது வாங்கும் என்று இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை நிலவியது. ஆனால் ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் அந்தப் பாடல் இடம்பெறாமலேயே போனது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இந்தமுறை ஏமாற்றம் அடைந்தாலும் அடுத்தமுறை நிச்சயமாக ஆஸ்கார் விருதைத் தட்டிச் செல்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள் பலர்.