Thursday, February 18, 2010
திறமையானவர்களை நிராகரிக்கிறதா விஜய் டிவி
சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரை நடனத்திலும் சிறந்தவர்கள் என நிரூபித்து, நேயர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற விஜய் டி.வி.யின் "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியின் 4 ம் பகுதி வெள்ளிக்கிழமை (ஜன.29) முதல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
"ஜோடி நம்பர் ஒன் சீசன் 4' என்ற இந்த புதிய நிகழ்ச்சியில் 9 நட்சத்திர ஜோடிகளுக்கிடையே கடுமையான நடனப் போட்டி நடைபெறுகிறது. இதில் வாரம்தோறும் ஒரு சர்வதேச நடனக் கலை நிகழ்ச்சி, ஒரு எலிமினேஷன், வைல்டு கார்டு சுற்று என பல புதிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.
நான்காவது பகுதியின் முக்கிய சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மக்களின் நேரடி வாக்கெடுப்பு, நட்சத்திர நடனங்கள், நட்சத்திர நடுவர்கள், பிரபல தொகுப்பாளர்கள் என சுவாரஸ்யமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வெல்லும் ஜோடிக்கு பல லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.நடனப் போட்டி நிகழ்ச்சியினூடே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கும் நேயர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முந்தைய மூன்று பகுதிகளை விட சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெறவுள்ள "ஜோடி நம்பர் ஒன் சீசன் 4' நிகழ்ச்சி, ஜனவரி 29 முதல் தொடங்கி கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வருகிறது கடந்த வாரங்களில் அறிமுகச் சுற்றில் அனைத்து ஜோடிகளும் நடனமாடினர்.
இதுவரை நடந்த நடன நிகழ்ச்சியில்(பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நெ 1) திவ்யதர்ஷினியும் தீபக்கும் தொகுப்பளராக பங்கேற்றனர் ஆனால்இதில் திவ்யதர்ஷினி நடனமாடுவதால் அவரது அக்கா ப்ரியதர்ஷினியும் தீபக்கும் தொகுப்பளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் யார் என்று சஸ்பென்ஷாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் என்னவென்று தெரியவில்லை ஏற்கனவெ விஜய் டிவியில் உங்களில் யார் அடுதத பிரபுதேவா,பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடனமாடியவர்களையே மறுபடியும் நடனமாட வைத்திருக்கிறார்கள் குறிப்பாக பிரியா(ஜோடி நெ 1) மணி,சாய்(பாய்ஸ் vs கேர்ள்ஸ்) செரிப்,திவ்யா,பிரேம் கோபால்(உங்களில் யார் அடுதத பிரபுதேவா) பிரியா,ரஜினி(மானாட மயிலாட)இன்னும் சிலர் எனப் பலரும் ஏற்கனவே நடனமாடியவர்கள்.
இவர்கள் நடனத்தை திரும்ப திரும்ப எததனை முறைதான் பார்ப்பது ஏன் வேரு நடனமாடுபவர்களே இல்லையா எவ்வளவோ திறமையுள்ள நடனமாடுபவர்கள் தமிழ் நாட்டில் உள்ளனர்.