Thursday, February 18, 2010
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 -ஒரு அலசல்...
விஜய் டிவி தனது ஒவ்வொரு படைப்பையும்,அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணமாகவே எடுத்து வருகிறது.
கனாகணும்காலங்கள்,அசத்த போவது யாரு,யாரு மனசுல யாரு,நடந்தது என்ன, போன்ற பல படைப்புகள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நிகழ்ச்சிகள்.
அந்த வரிசையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறந்து விழங்கி வருகிறது.இந்த நிகழ்ச்சியானது மூன்று முறை வெற்றிகரமாக மக்கள் மனதில் இடம் பிடித்தது,தற்போது நான்காவது முறையாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 என்ற பெயரில் மக்களின் பார்வைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
ஒரு முறை பார்த்தவரை மறுபடியும் பார்க்க தூண்டும் ஈர்ப்பு சக்தி நிறைந்த நிகழ்ச்சியாக இது திகழ்ந்து வருகிறது.இசை ஞானம் இருந்தால் தான் இந்த நிகழ்ச்சியினை பார்க்க முடியும் என்று சிலர் பார்ப்பதில்லை,ஆனால் இந்த நிகழ்ச்சியை பொறுத்த வரை இசை ஞானம் தேவையில்லை,ரசிப்பு தன்மை மட்டும் இருந்தாலே போதும் அனைவருக்கும் பிடித்து விடும்.
இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கும் மறு ஒளிபரப்பு மதியம் 1 மணிக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது
ஏதாவது ஒரு தொலைக்காட்சி வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டு வெற்றியை கண்டால் போதும் அதே போல் தொடர்வதில் தமிழ்நாட்டு தொலைக்காட்சி துறையினர்கள் இப்போது சிறந்து வருகின்றனர் என்றேதான் சொல்ல வேண்டும்.
எப்படியெனில்,
1.கலக்கபோவதுயாரு, சன் டிவி-யில் அசத்தபோவதுயாராக மாறியது,
2.ஜோடிநம்பர் 1 ,கலைஞர் டிவி-யில் மானாட மயிலாட என்று மாறியது,
இதற்கு சாட்சிகளாய் இருப்பினும்,ஏர்டெல் சூப்பர் சிங்கரும் ராஜ் டிவி-யில் வெளிவர ஆரம்பித்து விட்டது.
விஜய் தொலைகாட்சியை தவிர யாருமே,சுயமா சிந்திக்கவே மாட்டேன்கிறாங்க