Friday, February 19, 2010
'பேராண்மை' திரைப்படத்துக்கு எடிசன் விருது
சிறந்த தேச பக்திப் படத்துக்கான எடிசன் விருதை எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய "பேராண்மை' திரைப்படம் பெற்றது. இதற்கான விருதை அந்தப் படத்தின் நாயகன் ஜெயம் ரவி பெற்றுக்கொண்டார்.
வெளிநாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் இணைந்து ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படத்துறையினருக்கு "எடிசன்' என்கிற பெயரில் விருதுகள் வழங்கி வருகின்றன. 2009}ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் சிறந்த தேசப் பக்தி திரைப்படமாக "பேராண்மை' தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கான விருதை படத்தின் நாயகன் ஜெயம் ரவி பெற்றுக்கொண்டார். "அச்சமுண்டு அச்சமுண்டு' படத்துக்கான விருதை பிரசன்னாவும் சினேகாவும் பெற்றுக்கொண்டனர்.
சிறந்த இயக்குநருக்கான விருது "அயன்' படத்துக்காக இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை ஆர்த்தி பெற்றுக் கொண்டார். வாழ்நாள் சாதனையாளர்கள் விருது நடிகை மனோரமாவுக்கும் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் : விக்ரம், சிறந்த நடிகை: தமன்னா, குணச்சித்திர நடிப்பு: கிஷோர் மற்றும் அம்பிகா. புதுமுக நடிகை :ஷம்மு, புதுமுக நடிகர் : ஜானி, சிறந்த ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்ஸô, சிறந்த பாடகர் : கிரிஷ், சிறந்த பாடகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்ன பொண்ணு உள்ளிட்ட மேலும் பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.