உள்ளத்தை அள்ளித்தா, உனக்கா எல்லாம் உனக்காக, அருணாச்சலம், சுந்தரபுருஷன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் ரம்பா. இவருடைய திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற இருக்கிறது. கனடாவைச் சேர்ந்த மேஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளரான இந்திரனை கைப்பிடிக்கிறார். சமீபத்தில்தான் மேஜிக் உட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரம்பா நியமிக்கப்பட்டு, அவருக்கு ஒண்ணேகால் கோடி மதிப்பிலான சொகுசு கார் பரிசளிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்நிறுவனத்தின் விளம்பர தூதர் பணிக்காக தனது அண்ணனுடன் கனடா சென்றபோது இந்திரனுடன் பழக்கமாகி, ரம்பாவுக்கு பிடித்துப் போய்விட்டதால் இந்திரன் குடும்பத்தாருக்கும் ரம்பாவை பிடித்துவிட்டதால் அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் ரம்பாவின் நிச்சயதார்த்தம் அடையார் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் திருமண விழா போல கோலாகலமாக நடைபெற இருக்கிறது. மேலும் இந்த கோலாகல விழாவில் கலந்து கொள்வதற்காக கனடாவில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் சென்னை வ்ந்திருக்கிறார்கள் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.