நகைச்சுவை நடிகர் கஞ்சாக் கருப்பு பிசியோதெரபி மருத்துவரை இன்று கைப்பிடித்தார். இவர்களது திருமணம் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டரசன் கோட்டையில் உள்ள கஞ்சாகருப்பின் குலதெய்வம் கோவிலில் அவர்களது திருமணம் நடைபெற்றது. பின்னர் சிவகங்கை சத்யசீமான் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புவை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவரும், தேசிய விருது பெற்றவருமான பாலா, மற்றும் இயக்குனர் அமீர் ஒன்றாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் நடிகர், நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு கஞ்சாகருப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.