‘சிக்குபுக்கு’ ‘மதராச பட்டணம்’ ஆகிய படங்களில் நடித்துவரும் ஆர்யா, பாலா இயக்கும் படம் ஒன்றில் விஷாலுடன் சேர்ந்து காமெடி கேரக்டரில் நடிக்கிறாராம். “சர்வம், நான் கடவுள் போன்ற படங்களில் கடுமையாக உழைத்தேன். வித்தியாசமான நடிகன் என்ற பெயரையும் மக்கள் மத்தியில் பெற்றேன். ரசிகர்கள் ஒரு வித்தியாசமான கதையையும், நடிப்பையும் ஒவ்வொரு படங்களிலும் எதிர்பார்க்கிறார்கள். நான் இப்போது நடிக்கும் இரண்டு படங்களிலும் இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஆர்யாவை பார்க்கலாம்” என்ற அவர், தான் சொந்தமாக தயாரிக்கும் ‘படித்துறை’ படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறினார்.