ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மாப்பிள்ளை படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். பழைய மாப்பிள்ளை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த அமலா கேரக்டரில் ஹன்ஸிகா மொத்வானி என்ற இந்தி பிரபலம் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய இவர் தெலுங்கில் அர்ஜுனுடன் நடித்த தேசாமுடுகு என்ற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
கோலிவுட்டில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் இவரது முதல் படமே தனுஷின் ஹீரோயின் மற்றும் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் என்ற அந்தஸ்த்துள்ள படத்தில் நடிப்பதால் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவார் என்று பேசப்பட்டுவருகிறது.