எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றும் நவ்தீப்பின் வாழ்க்கையில் காதல் என்ற பெயரில் நான்கு பெண்கள் குறிக்கிடுகிறார்கள். ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்லப்போக அவளோ நட்பாக மட்டும் தான் பழகினேன் என்கிறாள். ஒரு காதல் தோல்விக்கு இன்னொரு காதல் தான் மருந்து என்கிற ரீதியில் சுஜாவை காதலிக்க அவரோ ஜஸ்ட் லவ் மட்டும் தான் உன்னோடு ஆனால் கல்யாணம் வேறு ஆளோடு என்கிறார். மூன்றாவதாக மதுமிதா குறுக்கிடுகிறார். ஆனால் அவரிடம் தன் காதலை சொல்வதற்குள் நவ்தீப்பின் நண்பன் அபினய்யை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் மதுமிதா. ஒரு வழியாக வங்கியில் வேலை பார்க்கும் மல்லிகா கபூருக்கு காதல் வலை வீச அவரும் இவரைக் காதலிக்கிறார். ஒருமுறை அபினய் மதுமிதாவிடம் நவ்தீப் ஒரு ப்ளேபாய் என்று சொல்லிவைக்க அவர் நவ்தீப்பை பார்த்து ஏன் இப்படி பல பெண்களுடன் லவ் என்ற பெயரில் சுற்றுகிறாய் என்று கேட்கிறார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகா கபூர் நவ்தீப்பை வெறுக்கிறார். இதற்கிடையே அபினய் மதுமிதாவை அனுபவித்துவிட்டு அவரை விட்டு ஒதுங்குகிறார். இதனால் மதுமிதா தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார். இதையறிந்த நவ்தீப் மதுமிதாவை அபினய்யுடன் திருமணம் செய்துவைக்க முயற்சிக்க அவரோ தாதா பிரகாஷ்ராஜிடம் போய் தன்னை காப்பாற்றும்படி கேட்டு அவருக்கு மாலை போட்டுவிடுகிறார். பிரகாஷ்ராஜ் நவ்தீப்பை எச்சரிக்கிறார்.கடைசியில் மதுமிதாவின் கல்யாணம் நடந்ததா? நவ்தீப் காதலியுடன் சேர்ந்தாரா? என்பது சுபமான க்ளைமாக்ஸ்
தன்னுடன் நட்பாக பழகும் பெண்களிடம் எல்லாம் காதல் வசப்படும் நவ்தீப் இந்தக் காலத்து பையன்களை அப்படியே பிரதிபலிக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறை ஏமாறும்போதும் க்ளைமாக்சில் பிரகாஷ்ராஜுடன் பேசும் காட்சியிலும் நன்றாக ஸ்கோர் பண்ணுகிறார்.