Thursday, March 4, 2010
இசையருவி சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரதிப்‘குறுநில மன்னன்’ படத்தில் ஹீரோ
இசையருவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரதீப்பை ‘குறுநில மன்னன்’ (கே.ஆர்.கே.பிலிம் சர்க்யூட் நிறுவனத் தயாரிப்பு) சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார், இயக்குனர் முருகையா. கூத்துப்பட்டறையில் இவருக்கு 2 மாத பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
கதை நாயகி வித்யா சேர நாட்டு வரவு. ஏற்கனவே ‘ஆறாம் வனம்’ புகுந்துள்ளார். ‘பசங்க’ பட அண்ணி செந்தி முக்கிய வேடமேற்றுள்ளார்.வில்லனாக கூத்துபட்டறையிலிருந்து செகத் என்கிற வாலிபரை இறக்கியுள்ளனர்.இதில் இடம்பெறும் மெய்யர், சொக்கர், சேவாயி, மலர்கொடி, கொட்டாணி பத்திரங்கள் ரத்தமும், சதையுமாக அம்மண்ணில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள்.
இதில் வரும் பல பாத்திரங்களில் கிராமத்து மனிதர்கள், நாடக நடிகர்கள்,தெருக்கூத்து கலை என்று பல்வேறு களங்களிலிருந்தது கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிருக்கிறார்கள்.
காரைக்குடி, சிவகங்கையை சுற்றியுள்ள பகுதிகளில் 39 நாட்களில் முலுப் படத்தயும் முடித்திருக்கிறார்கள் இயக்குனர்.
சினிமாவில் ஜல்லிக்கட்டை பார்த்ததுண்டு. இதுவரை எந்த படத்திலும் பார்க்காத ‘வடமாடு மஞ்சு விரட்டு’ என்னும் வீர விளையாட்டு இதில் இடம் பெற்றுள்ளது.
நடுவில் உரல் இருக்க, நீளமான கயிறை அதில் கட்டி மருமுனையில் வீரமாடு கட்டப்பட்டிருக்கும். அதன் கலுத்தில் பரிசுப் பொருள் கட்டப்பட்டிருக்கும். 9 பேர் களத்தில் இறங்குவர்.மாட்டைத் தொடக்கூட முடியாத அளவுக்கு சீறும். அரைமணி நேரத்தில் பரிசை எடுக்க வேண்டும். இதுதான் போட்டி. இதுதான் போட்டி. இது பரபரப்பாக படமாகியுள்ளாது..கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம் ர.முருகயா, ஒளிப்பதிவு-ராசமதி,இசை-ஜோகன்,பாடல்கள்-நா.முத்துக்குமார்,கலை-ராஜா,படத்தொகுப்பு-பிராபகர்,சண்டை-பயர் கார்த்திக், நடனம்-தேவேந்திரன்,தயாரிப்பு நிர்வாகம்-சேகர்,தயாரிப்பு-நிஷா கென்னடி