Friday, March 5, 2010
ஜூன் 18ல் ரிலீஸ் ஆகிறது ராவணா!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திற்கும் ராவணா படம் ஜூன் 18ல் ரிலீஸ் ஆகும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். தமிழில் விக்ரம் ஹீரோவாகவும், இந்தியில் அபிஷேக் பச்சான் ஹீரோவாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்தி ராவணாவில் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பல மாதங்களாக நடைபெற்ற ஷூட்டிங் தற்போது முழுமையாக முடிந்துள்ளது. படத்தின் இதர பணிகள் நடந்த வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு (ஆயுத எழுத்து) மணிரத்னம் இயக்கும் தமிழ் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ரிலீஸ் ஆகும் நாள் தள்ளி போனதை அடுத்து, இறுதியில் ஜூன் 18ல் படம் ரிலீஸ் ஆகும் என பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.