Thursday, February 4, 2010
ஹீரோவாகும் முதல்வர் கலைஞர் பேரன்....
முதல்வர் கலைஞர் குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசு தமிழ் சினிமாவுக்குள் காலெடுத்து வைக்கிறார்.
முதல்வர் கருணாநிதிக்கும், தமிழ் சினிமாவுக்கும் இடையிலான பந்தம் இன்று நேற்றல்ல, பல காலமாகவே பின்னிப் பிணைந்திருக்கும் ஒன்று.
சமீப காலமாக முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் சினிமாவில் வலுவாக காலூண்றத் தொடங்கியுள்ளனர். முதலில் சன் குழுமம் சன் பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்புப் பிரிவைத் தொடங்கியது. இதையடுத்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். இவரைத் தொடர்ந்து மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தற்போது தயாரிப்பில் குதித்தார். இவர்களைத் தொடர்ந்து முதல்வரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி பாடகராக அவதாரம் எடுத்தார். தற்போது கைவசம் நிறையப் படங்களுடன் பிசியாக இருக்கிறார் அறிவுநிதி.
இந்த நிலையில் முதல்வரின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதியும் சினிமாவுக்குள் பிரவேசிக்கிறார். மற்றவர்களைப் போல கேமராவுக்குப் பின்னால் நிற்காமல் கேமரா முன்பு ஹீரோவாக நிற்கப் போகிறார் அருள்நிதி. பசங்க படத்தை இயக்கிய பாண்டிராஜ் அடுத்து இயக்கப் போகும் படத்தின் நாயகன் அருள்நிதிதான். இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது அருள்நிதியின் தந்தையான தமிழரசேதான்.
தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் கலைஞர் வாரிசுகளின் கலைப் பயணம் அருள்நிதி மூலமும் தொடருமா....? பொருந்திருந்துதான் பார்க்கவேண்டும். பார்ப்போம்....