Monday, February 8, 2010
மீண்டும் ஹீரோவாகிறார் அமீர்....
யோகி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் சற்று பலமாகவே சறுக்கிவிட்டார் இயக்குனர் அமீர், இனி டைரக்சனில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என்று ரசிகர்களால் மிகவும் விமர்சிக்கப்பட்டார். ஆனால் மறுபடியும் ஹீரோவாகும் ஆசையில் மீண்டெழுந்து வந்திருக்கிறார். அரசியல் பின்புலத்தோடு தயாராகவிருக்கும் அவருடைய கண்ணபிரான் படத்திற்கு முன்பு, ஏதாவதொரு படத்தில் ஹீரோவாக நடித்துவிடும் என்று அலைந்தவருக்கு கையில் அகப்பட்டவர் கூடல்நகர் படத்தை இயக்கிய சீனு ராமசாமி.
பரத், சந்தியா, பாவனா கூட்டணியில் நம்பிக்கையுடன் இயக்கிய சீனுவுக்கு கோடம்பாக்கம் ஏமாற்றமே அளித்தது. எப்படியும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியோடு அடுத்த கதையை ரெடி பண்ணிக்கொண்டு முன்னணி ஹீரோக்களிடம் அலைந்து திரிந்து, கடைசியாக யோகியில் அமீரின் தோற்றத்தைப் பார்த்து அவரிடம் சென்றிருக்கிறார்.
அற்புதமான கதை, அட்டகாசமான சம்பளம் என அமீர் ஓ.கே. சொல்லியிருக்கிறார். அடுத்து ஹீரோயின்தான் தேவை. அதுவும் இப்போதைக்கு ஓ.கே.தான். அட வேற யாரும் இல்லீங்க. நம்ம ஆயிரத்தில் ஒருத்தி ஆண்ட்ரியாதான்.